‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க தயாரானார்.

இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும், மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

இந்நிலையில் வடிவேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வடிவேலு மாமன்னன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அவரை படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.