மும்பை

னது குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசக்கூடாது என உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

கடந்த 31 மற்றும் 1 ஆம் தேதிகளில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்  நடந்தது.  பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணி வாரிசு அரசியல், ஊழலை ஒழிக்க விரும்புகிறது எனக் கூறியிருந்தார். இதையொட்டி மோடியின் பெயரை குறிப்பிடாமல் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே,

 ”தனது சொந்த குடும்பத்தையே புறக்கணித்தவர்கள், அடுத்தவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசக் கூடாது. –இந்துக்களின் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பு, குடும்ப உறவு உள்ளது. நீங்கள். உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள். அதன்பிறகு எங்களின் குடும்பம் பற்றி பேசுங்கள்.

சிவசேனாவினரான கிஷோரி பெட்னேக்கர், அனில் பரப், சஞ்சய் ராவத் போன்ற பலரும்  துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் பாஜகவில் சேரவில்லை எனில், சிறைக்குப் போக நேரிடம் என மிரட்டுகின்றனர். பாஜகவினரும் சிறைக்கு போக வேண்டிய நேரம் வரும்.

பால் தாக்கரே வாழ்நாள் முழுவதும் பாஜகவுக்குப் பல்லக்கு தூக்க இந்த சிவசேனா கட்சியைத் தொடங்கவில்லை. விரைவில் நாம் சர்வாதிகார பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்”.

என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.