பெங்களூரூ:
பெர் நிறுவனம் பெங்களூரில் 10% கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக கேப் அக்ரிகேட்டர் சேவையான உபெர் பெங்களூரில் பயணக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து உபேர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளின் தலைவர் நிதிஷ் பூஷன் தெரிவிக்கையில், “நாங்கள் ஓட்டுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, தற்போதைய எரிபொருள் விலை உயர்வு கவலையை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்கிறோம். வரும் வாரங்களில், எரிபொருள் விலை நகர்வை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம்,” என்றார்.

பெங்களூருவில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல் விலை ரூ.111.09 ஆகவும், டீசல் விலை ரூ.94.79 ஆகவும் உள்ளது.

முன்னதாக, எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, உபெர் நிறுவனம் டெல்லி என்சிஆர் பகுதியில் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.