டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின்  ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகள், இந்திய அரசுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து செப்டம்பர் வரை 4 மாதம் கோதுமை ஏற்றுமதி, மறு ஏற்றுமதியை தடை செய்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் திடீரென்று இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கியஅரபு எமிரேட்ஸும் இந்தியாவும் கடந்த  பிப்ரவரியில் ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது ஒருவருக்கொருவர் சரக்குகள் மீதான அனைத்து வரிகளையும் குறைக்க முயல்கிறது மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குள் தங்கள் வருடாந்திர வர்த்தகத்தை $100 பில்லியன்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. CEPA), மே 1 முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், வளைகுடா நாட்டின் பொருளாதார அமைச்சகம் 4 மாதங்களுக்கு இந்திய கோதுமை மற்றும் கோதுமை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.  சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.