டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் இன்று 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலை யில், அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று 3வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி போராடிய நிலையில், அவரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்நாள் இரவு மணி வரை ராகுலிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று 2வது நாளாகவும் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று ம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சோனியாகாந்தி ஜூன் 23ல் ஆஜராக உள்ளார்.

ராகுலை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளதால்,   அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு  சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர். அணுகுசாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், 3வது நாளாக தடையை மீறி  காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். பூபேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால்.தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி உள்பட  காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக அரசின் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் எம்பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது.  தமிழக எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி  கைது செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அக்கட்சியின் தொண்டர்களை யும் தலைவர்களையும் விரட்டி விரட்டி கைது செய்தனர்.

எங்கள் அலுவலகத்திற்குள் நுழையாதீர்கள் என காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வாசலை மறித்தப்படி காவல்துறையினர் முழக்கமிட்டபடி டுத்து வருகின்றனர்.