சென்னை:
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளன. இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையே இணையும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு இணையும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று 3 மணி அளவில் இரு அணிகளும் இணைய இருக்கும் சாதகமான சூழல் உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் வந்தனர். அவர்களை எடப்பாடி அணியினர் வரவேற்று அழைத்துச்சென்றனர். அதைக்கண்ட அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்துகொண்டி ருக்கிறார்.
இதற்கிடையில் தினகரன் நியமித்த நிர்வாகிகளும் அதிமுக அலுவலகம் வந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் இணைகின்றன.
அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் ஜெ. சமாதிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே ஜெ. சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் சென்னை வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் மீண்டும் மாஃபா பாண்டியராஜனுக்கும் பதவி கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.