சென்னை,

திமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட, கூட்டணி கட்சியி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டாக பிளவுபட்ட அதிமுக தற்போது 3 அணிகளாக உள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியும், இபிஎஸ் அணியும் இணையும் என்று கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை எடப்பாடி ஏற்று, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியும், ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இரு அணிகளும் இணைய எந்தவித தடையும் இல்லை என்று கூறப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரு அணிகளும் இணையும் என்று அனைவரும், எதிர்பார்த்த நிலையில், ஓபிஎஸ் அணியினரின் ஆலோசனை கூட்டம் தாமதத்தால் அன்று எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் இணைப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில், இன்று இரு அணிகளும் இணைகிறது… ஓபிஎஸ் துணைமுதல்வராகிறார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு தகுந்தார்போல் ஜெயலலிதா சமாதி இன்று மீண்டும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

இதன் காரணமாக இரு அணியும் இன்று இணைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஓபிஎஸ் அணியின், சசிகலாவை நீக்கினால்தான் இணைவோம் என்று திடீரென நிபந்தனை விதித்தால் இரு அணிகளும் இணைவதில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இதற்கிடையில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அவர்கள் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கினால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.

இதற்கிடையில், அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான கருணாஸ், தணியரசு அன்சாரி ஆகிய 3 பேரும் எங்கே என்று பரபரப்பாக கேள்வி எழும்பியது.

இவர்கள் 3 பேரும் டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தவர்கள். டிடிவி தினகரனின் மேலூர் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு, தங்களது ஆதரவை மீண்டும் உறுதி செய்தவர்கள்.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டுக்களும் முக்கியம் என்ற நிலையில்,  டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ்பெற்றால் ஆட்சி கவிழ்வதை தவிர்க்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு தேவை.

இந்நிலையில், அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அன்சாரி, தணியரசு எங்கே என்று தேடியபோது அவர்கள் 3 பேரும் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலங்களில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கருணாஸ் கேரளாவிலும், அன்சாரி புருனேவிலும், தனியரசு பரமத்தி வேலூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.