சென்னை:
திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.