சென்னை: சென்னை திரிசூலம் கல்குவாரியில் உள்ள கல்குட்டையில் மூழ்கி 2 இளம் போட்டோகிராபர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த 2 பேரும் விஸ்காம் படிக்கும் மாணவர்கள் என கூறப்படுகிறது.

சுமார் 20வயது மதிக்கத்தக்க கல்லூரிகள் மாணவர்கள் 4 பேர் திரிசூலம் பகுதியில் உள்ள மலைகளில் போட்டோசூட் நடத்தி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள கல்குட்டையில் குளித்து மகிழவும், போட்டோ எடுக்கவும் முன்வந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக கல்குட்டை பாறையில் இருந்து வழுக்கி ஒருவர் குட்டைக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றொருவரும் கல்குட்டைகள்குள் குதித்துள்ளார். இருவருக்குமே  நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. அதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்க்கி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, மற்ற நண்பர்கள் 2 பேருக்கு உடனடியாக காவல்துறைக்கும், பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், .இறந்த இளம் போட்டோகிராபர்களின்  உடல்களைக் குவாரி தொழிலாளர்களின் உதவியுடன் தேடினர்.  நேற்று அவர்களின்   இறந்த உடல்கள் நீரிலிருந்து மீட்கப்பட்டது. அவர்களின்  சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  விசாரணையில், மாணவர்கள் விஸ்காம் படிக்கும் கல்லூரி மாணவர்கள் என்பதும், போட்டோகிராபியில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

திரிசூலம் பகுதியில் உள்ள இந்த கல்குட்டை ஏரி   72 அடி ஆழம் உள்ளதாகவும், இதில் அடிக்கடி பலர் மூழ்கி உயிரிழந்து வருவதாகவும்,   அருகில்  வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.