முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அமைச்கர்களில் முதலில் ஆதரவு தெரிவித்தவர் இவர்தான்.

அதே போல கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையனும் இன்று மாலை ஓ.பி.எஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இற்கிடையே கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலாவின் உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை அவர் இன்று சென்று சந்தித்தார். அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆனால் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பங்கேற்கவில்லை. ஆகவே அவர்கள் இருவரும் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel