சென்னை,

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் சரத்குமார் தனது ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து, தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.   முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது  ஆதரவை தெரிவித்துள்ளார்.

 

இவர் தவிர, முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பிரசாத் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

மேலும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேலும் முதலமைச்சருக்கு ஆதரவு அளித்து உள்ளார்.