சென்னை,

மிழகத்தில் தற்போது ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சசிகலாவின் அகங்கார பேச்சையடுத்து,  சென்னையில் ஆளுநர் மாளிகை, மெரினா கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

கவர்னருக்கு  இன்று மீண்டும் சசிகலா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மீண்டும் ஆட்சியமைக்க நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும், அதற்கு மேல் நாம் செய்ய வேண்டியதை செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, அவரது  ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்கு சென்று அங்குள்ள சட்டமன்ற உறுப்பி னர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நேராக ஆளுநர் மாளிகைக்கு வரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

ஆளுநர் இதுவரை சசிகலாவுக்கு நேரம் ஒதுக்காத நிலையில்,  சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா நடத்தலாம் என தகவல்கள் உலா வருகிறது.

இதன் காரணமாக சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று போலீசார் தரப்பில் எதிர்பார்ப்ப தாகவும், அதற்காரணமாகவே சென்னை முழுவதும் போலீசார்  உஷார் படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகிறது.

சென்னையில் ஆளுநர் மாளிகை, மெரீனா கடற்கரை, திருவல்லிக்கேணி பகுதி, மவுண்ட் ரோடு மற்றும் வடசென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

வடசென்னை பகுதியான வியாசர்பாடி, மூலக்கடை, மாதவரம், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டி ருக்கிறார்கள். கடற்கரையில் யாராவது அணி திரள்கிறார்களா என்றும்  கண்காணித்து வருகின்ற னர்.

சசிகலாவின், அகங்கார பேச்சுக்கு   பன்னீர் செல்வம் அணியினர் ஆட்சேபம் தெரிவித்து இருக்கி றார்கள்.  இந்தப் பேச்சை, மத்திய அரசும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சசிகலாவின் பேச்சை தொடர்ந்தே போலீசார் எச்சரிக்கையாக இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, கவர்னர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலர், தமிழக காவல் துறைத் தலைவர் உள்ளிட்டோருடன்  சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது