பன்னீர் “புரட்சி”க்குக் காரணம் மத்திய அமைச்சர்கள் இருவர்தான்!: சு.சுவாமி அதிரடி பேட்டி

Must read

 

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ர் என்று வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க. மூத்த தலைவரும் அக் கட்சியினஅ ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமிதான்.

இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சசிகலா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் சுவாமி பேசினார்.

அப்போது அவர்,, “இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் என்று நான் எதிர்பார்த்தேன்.  இந்த நான்கு ஆண்டு தண்டனையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியாது என்று உறுதியாக நம்பினேன்.

மிக உயர்ந்த இடத்தில் இருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் ஊழலில் ஈடுபட்டார்கள்  என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிபடுத்தி இருக்கிறது. இது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று சுவாமி தெரிவித்தார்.

மேலும், ‘தற்போதைய தமிழக முதல்வர் ‘ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி அரசியல் ஆட்டத்துக்குக் காரணம், மத்திய அரசில் இருக்கும் இரு அமைச்சர்கள்தான். உரிய  நேரம் வரும்போது அவர்கள் யார் என்பதை வெளிப்டையாக கூறுகிறேன்” என்றார்.

தமிழக கவர்னர் வித்யாசாகர் குறித்து தெரிவித்த சுவாமி, “ஆளுநர் அவரின் பணியைச் சரிவர செய்யவில்லை. அவருக்கு தவறாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இனியாவது அவர் சரியான முடிவை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

 

 

More articles

Latest article