கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

Must read

கோவை: 
கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் உள்ளிட்ட 2 பேரையும் காவல்துறை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண் தங்கியிருந்த விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கதறி அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர்  கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர் மற்றும் வார்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.  இதனை அடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

More articles

Latest article