சென்னை: 
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று  வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நினைவு நாள் உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அனைவரும் உறுதியேற்றனர். கட்சியை அழிக்கப் பகல் கனவு காண்போரின் சதியை முறியடிக்கப் போவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர். ஜெயலலிதா நினைவிடம் செல்லும் அதிமுக நிர்வாகிகள், அருகில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் செல்லாமலேயே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.