சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு

Must read

சென்னை:
சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் இந்த மகா காந்தி. அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் காவல்துறை விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்குச் சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியைத் தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து மகா காந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

More articles

Latest article