சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் சென்னை காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று 3 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னையில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடரக் கூடாது, குறித்த நேரத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் களம் கடும் வெயிலையும் மீறிகொதித்துக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மாவட்ட வாரியாக சென்று தங்களின் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தினம்தோறும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சார பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். அவருக்கு கூடும் அதீக கூட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே பெரம்பூரில் தொகுதியில், வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டது, பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் காரணமாக பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்தார். மேலும், காவல்துறை பாதுகாப்பு தருவதில் குளறுபடி ஏற்பட்டதாக தன்னுடைய குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். சில இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதிக்கவில்லை எனவும், குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதால் பிரச்சாரத்தை ரத்து செய்ததாகவும் விஜய் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகர காவல்ஆணையர் உள்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தியாகராய நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், மூன்று தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
அதில் வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம் ரித்தர் டன் சாலை, தியாகராய நகரில் முத்துராமன் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் இன்று3 மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் யாரும் பின்தொடரக் கூடாது, குறித்த நேரத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், குறிப்பிட்ட நபர்கள்தான் பிரச்சாரத்திற்கு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கொடுத்து காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை வழங்கிய அனுமதி என்ஓசியை பெற்று, தேர்தல் அதிகாரிகளும் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
[youtube-feed feed=1]