சென்னை:  மத்திய பாஜக அரசு, நாளை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை  திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ள நிலையில், அது தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலி இன்று (5.04.2026 )  மாலை 5 மணியளவில் தருமபுரி மாவட்டம்  காரிமங்கலம் பெரியாம்பட்டியில் (பொதுக்கூட்டம்) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன் காரணமாக காணொளி காட்சி மூலம் திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அதிமுக, பாஜக, தொகுதிகள் குறையது என கூறி வருகின்றன. இந்த நிலையில்,  இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு, மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில், ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம்’ என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நாளை  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின்  திமுக எம்.பிக்களுடன்  அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

இன்று  காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]