தூத்துக்குடி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் திட்டமிட்டு நடத்திய சதிசெயல் வன்முறை யாக மாறி, 13 அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர் போலீசார்.

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த வேளையில், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நேற்று வீடு வீடாக சென்று போலீசார் ஆண்களையும்,  இளைஞர்களையும் இழுத்து சென்ற நிலையில், அவர்களில் 78 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் போலீசார் பொதுமக்களை தேடிச்சென்று கைது செய்யும் வீடியோ….

இன்று  3வது நாளாக தூத்துக்குடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  தூத்துக்குடி, நெல்லை குமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி உள்ளதாகவும், ஊடகங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு பணிந்து – பயந்து செய்திகளை வெளியிட மறுத்து வருவதாலும் அங்கு நடைபெறும் போலீசாரின் அடக்குமுறை வெளியே தெரியாமல் அமுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.