தூத்துக்குடி: சர்ச்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை வெட்டி கொலை! காதலன் தூக்கிட்டு தற்கொலை!

Must read

துத்துக்குடி:
ஒருதலைக்காதலால் சர்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை காதலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
tuti new photo
 
 
தூத்துக்குடியில்  கிறிஸ்தவ ஆலத்துக்குள் ஜெபம் செய்து கொண்டிருந்த ஆசிரியையை  ஒரு தலையாக காதலித்து வந்த இளைஞர் வெட்டி சாய்த்தார்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திராநகரை சேர்ந்தவர் நியூட்டன் மகள் பிரான்ஸினா(24) இவர் பிரையண்ட் நகர் பகுதியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரை ஜெனிஸ்டன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அதற்கு பிரான்ஸினா மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (சற்று முன்) கீழ சண்முகபுரத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் (பேட்ரிக் சர்ச்) பிரான்ஸினா ஜெப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சர்ச்க்குள் புகுந்த ஜெனிஸ்டன் என்கிற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் பிரான்ஸினாவை வெட்டினார். பின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வரும் பிரான்ஸினா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி போலீஸார் குற்றவாளியை தேடி  வந்தனர். அதற்குள் குற்றவாளியான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி அந்த பகுதியில் பரரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article