சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் இன்றுமுதல் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக மாறும் வாயப்பு உருவாகி உள்ளது. இது அம்மாவட்ட மக்களிடையே உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பசுவந்தனையை சேர்ந்த வேலம்மாள் சிகிச்சை நிறைவடைந்து குணமாகி இன்று வீடு திரும்பினார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி  கரூர்  மாவட்டங்களைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,364 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அவர்களில் 27 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியானார்.  25 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், வேலம்மாள் என்ற ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தார். அவரும் குணமான நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.