சென்னை:
த்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் ஊரடங்கு தளர்வு கேள்விக்குறியாகி உள்ளது.
மத்தியசுகாதாரத்துறை செயலாளர் பிரித்தி சூதன் மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா பாதிப்பு தொடர்கான சிவப்பு, ஆரஞ்ச, பச்சை மண்டலங்கள் குறித்து புதிய நெறிமுறைகைளை தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து எந்தெந்த மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற பட்டியலையும் வெளியிட்டு உள்ளார்.

கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்றும், மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள், தொற்றே இல்லாத மண்டலங்கள் பச்சை மண்டலங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலம் என தெரிவித்துஉள்ளது. மீதமுள்ளவை பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டமாக (சிவப்பு மண்டலம்)  அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்:
 சென்னை, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் , செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம் 
ஆரஞ்சு மண்டலமாக 24 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம்:
தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி, திருச்சி 
பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் பட்டியலில் இருந்த நிலையில், தற்போது, 12 மாவட்டமாக குறைந்துள்ளது.
28 நாட்களுக்குள் புதிதாக கொரோனா நோயாளி பாதிப்பு வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது.