பனாஜி:

ணைய புற்றுநோயால், பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 1ந்தேதி தலைமை செயலகம் வந்து பணியாற்ற தொடங்கினார்.

இந்த நிலையில், இன்று கோவா சட்டசபையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உட்கார்ந்து கொண்டு பட்ஜெட் உரையை வாசித்தார்.

2019-20 ஆண்டுக்கான வருவாய் உபரி பட்ஜெட்டை முன்வைத்த  பாரிகர், மாநில சட்டமன்றத்தில் ஒரு சுருக்கமான அறிக்கையைப் படித்தார், சபாநாயகர் பிரமோத் சாவந்த் தனது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினர்.

“தற்போதைய சூழல்கள் விரிவான பட்ஜெட் உரையை வழங்குவதிலிருந்து தடுத்திருக்கின்றன, ஆனால் மிக உயர்ந்த ஒரு ஜோஷ் உள்ளது, நான் முழுமையாக இருக்கிறேன், என்னால், திறம்பட மொழி பெயர்க்க  முடியும் என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, மாதங்களில் தனது முதல் பொது விழாவில் பாரிகர் உரி படத்தில் உள்ள ‘ஜோஷ் எப்படி?’  என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

கடந்த  2016ம் ஆண்டு, இந்திய ராணுவம்  பாகிஸ்தானுக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த சர்ஜுகல் ஸ்டிரைக் எனும் தாக்குதல் இந்திய ராணுவத்தின் வலிமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதையே மையமாக வைத்து “உரி: தி சர்ஜுகல் ஸ்டிரைக்”என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தர்.

சமீபத்தில் மும்பையில் பிரதமர் மோடி இந்தப் படம் குறித்து how’s the Josh என்று புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் கோவா சட்டமன்றத்திலும் இதுகுறித்து விமர்சிக்கப்பட்டது.

இன்றைய பட்ஜெட் வாசிப்பின்போது, புத்தகத்தின் பக்கங்களை கூட புரட்ட முடியாமல் பாரிக்கர் அவதிப்பட்டார். அவருக்கு  மார்ஷல்கள் உதவி புரிந்தனர்.

பாரிகர் தனது தாயார் மற்றும் கோவாவிற்கு நிறைய கடன்பட்டிருப்பதாகவும்,  “எனது கடந்த மூச்சு வரை நேர்மையும், நேர்மையும், அர்ப்பணிப்புடன் கோவாவை சேவிக்கும்” என்றும் கூறினார்.