சென்னை,

டைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு டிடிவி தரப்பினர், பணம் கொடுப்பதாக டோக்கன் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் டோக்கனை கொடுத்து பணம் கேட்ட வாக்காளர்களை தாக்கியதாக டிடிவி ஆட்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் பகுதியில், நூதன முறையில் வாக்காளர்களுக்கு டிடிவி தரப்பினர் பணம் விநியோக முறையை கையாள்வதா  பத்திரிகை.காம் இணைய  இதழ் முதன்முதலாக செய்திவெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை தேர்தல் வாக்குப்பதிவு அன்று 15 பேரை கைது செய்தனர்.

அதன்படி,  ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, டிடிவி தரப்பினர் ரூ.20 நோட்டுக்களை விநியோகித்து வருவதாகவும், அதில் உள்ள சீரியல் எண்ணின்படி வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஒரு ஓட்டுக்கு 12 ஆயிரம் பணம் விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தோம்.

டோக்கன் விநியோகிக்கும்போது,  வாக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரே, இந்த நோட்டை கொடுத்தால், அதற்கான பணம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்திகை.காம் செய்தி வெளியானதை தொடர்ந்தே  போலீசாரும், அரசியல் கட்சியினரும் புகார் கூறியதால், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டோக்கன் வழங்கப்பட்ட பலர், தேர்தலுக்கு பிறகு, டிடிவி ஆதரவு முகவர்களை சந்தித்து பணம் பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த பணப்பட்டுவாடா அனைத்தும், கொடுங்கை யூர் குப்பைத்தொட்டி அருகே உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இதற்கிடையில் பல முகவர்கள், தங்களதுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுக்காமல், எஸ்கேப்பானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  கொடுத்த டோக்கனுக்கு  பணம் கேட்டபோது, அவர்களுக்கு பணம் தர மறுத்த தாகவும், இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத்தை தொடர்ந்து,  வாக்காளர்களை டி.டி.வி ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வாக்காளர்கள் ஆர்.கே நகர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்த,   வாக்காளர்களை தாக்கியதாக டி.டி.வி ஆதரவாளர்கள்  வேலு,பாலாஜி,ஜான்பீட்டர் சரண்ராஜை ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து  வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

பத்திரிகை.காம் முதன்முதலாக  வெளியிட்ட செய்தி….

https://patrikai.com/new-technic-10-and-20-rupees-notes-rounds-in-rk-nagar/

20 ரூபாய் நோட்டு வாயிலாக பண விநியோகம்! 15 பேர் கைது