சென்னை,

சிகர்களுடனான இன்றைய சந்திப்பின்போது ரஜினிகாந்த் பழைய பட நினைவுகளை பகிர்ந்தார். அப்போது, முல்லும் மலரும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஜெயலலிதா தன்னை பாராட்டினார் என்று நினைவு கூர்ந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுடனான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் இன்று  5 மாவட்ட ரசிகர்களை  ரஜினி சந்திக்கிறார். இதையடுத்து, அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குவிந்தனர்.

இன்றைய கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர்கள் கலைஞானம், மகேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினர். இன்றைய கூட்டத்தில் பேசிய இயக்குனர் மகேந்திரன் முல்லும் மலரும் படம் குறித்து பேசியிருந்தார்.

அதைத்தொடர்ந்து ரஜினி ரசிகர்களிடையே பேசினார். அப்போது தனது அரசியல் குறித்து வரும் 31ந்தேதி அறிவிப்பதாக கூறிய அவர், தனது கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

“ஹீரோவாக அறிமுகமான காலத்தில் மகேந்திரன் சார் டைரக்ஷனில் நடிக்கும் போது நான் என் இஷ்டத்திற்கு நடித்துக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு ஷாட்டையும் ஓகே செய்வதற்குள் உயிர் போயிடும்.

‘ஜனங்களுக்குப் புடிச்சிடுச்சு.. அவங்களுக்கு ஒத்துக்கிட்டாங்க..அதுக்கு அப்புறம் என்ன? அது தானே நாம செய்யுறது’ என்ற எண்ணத்தில் இருந்தேன்.  அதை மாற்றி நடிக்க வைத்தவர் இயக்னர் மகேந்திரன் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

மேலும், எப்பவுமே முன்னாலே வந்து சொல்லுறதை விட பின்னாலே சொல்வது தான் நம் தலையில் ஏறும். நம் காதுகளில் வந்து விழும். முன்னால் எது சொன்னாலும் ஏறாது என்ற ரஜினி,

மகேந்திரன் இயக்கத்தில் நடித்த  முள்ளும் மலரும் படத்தைப் பார்த்த மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ‘எக்சலண்ட் பர்ஃபார்மன்ஸ். கங்கிராஜுலேஷன்ஸ்’ அப்படின்னு எங்க வீட்டுக்கு பொக்கே அனுப்பியிருந்தார் என்று தனது கடந்தகால மலரும் நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்தார்.

மேலும்,  டிசம்பர் 12-ம் தேதி என்னுடைய பிறந்த நாளின் போது கடந்த பல ஆண்டுகளாகவே நான் வீட்டில் இருப்பதில்லை. அன்று மட்டுமாவது தனிமையில் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். அதனால் வெளியூர் போய்விடுவேன். இது எல்லாருக்குமே தெரியும்.

ஆனாலும் இந்த ஆண்டு நிறைய ரசிகர்கள் என் வீட்டு வரைக்கும் வந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள் என்ற தகவல் கேட்டு வருத்தப்பட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.

எப்போதுமே என் பிறந்த தினத்தன்று பார்க்க வர வேண்டாம். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். எதுவும் குறை இருந்தாலும் அதை பெரிது படுத்த வேண்டாம் என்றார்.

மேலும்,  வெளியில் சுற்றி விட்டு வீட்டிற்குச் சென்று முகத்தைத் தண்ணீரால் கழுவினால் அழுக்கு படிந்திருக்கிறது தெரியவருமோ.. அதே போல நம் மனதை மேற்படி செய்திகள் நமக்குத் தெரியாமலேயே ரொம்பவே படிந்து விடும் அதை சரியாக்க வேண்டுமென்றால் தியானம் செய்ய வேண்டும்.

நல்ல செய்திகளைக் கேட்டு உள் வாங்க வேண்டும். எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே யோசியுங்கள். அதுதான் உங்கள் மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கைக்கும் நல்லது.

நன்றி.. நம்ம வேலையை ஆரம்பிப்போம் என்று ரசிகர்களுடனான புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்கினார்.