தீபா கணவர் மாதவனை பின்பற்றிய டி.டி.வி.தினகரன்?

Must read

 

ருவழியா, புதுக் கட்சி ஆரம்பிச்சுட்டார் டி.டி.வி. தினகரன். “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”.

கட்சிப் பெயர்ல “திராவிட” இல்லையேன்னு ஆளாளுக்கு வருந்துறாங்க. திராவிடச் செல்வர் இப்படி செய்யலாமான்னு ஆதங்கப்படுறாங்க.

மாதவன் – தினகரன்

திராவிடத்தை விட்டாலும் திராவிட கொடி கலருங்களை தினகரன் விடலை. அதுவும் அ.தி.மு.க. மாதிரியே மூவர்ணக் கொடி.. அண்ணாவுக்கு பதிலா ஜெ.

அதான் வித்தியாசம்.

ஆனா அந்த ஜெயலலிதா உருவத்தை வச்சி இப்போ ஆளாளுக்கு தினகரனை கலாய்க்கிறாங்க.

மாதவன் கட்சி கொடி

அதாவது, ஜெயலலிதாவோட அண்ணன் மகள் தீபாவோட கணவர் மாதவன் ஒரு கட்சி நடத்துறாருல்ல.. “எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழகம்”… அந்தக் கட்சி கொடியில இருக்கிற ஜெ. உருவத்தையே தினகரன் தனது கட்சிக் கொடியில பயன்படுத்தி இருக்கிறாரு அப்படின்னு கலாய்க்கிறாங்க.

தினகரன் கட்சிக் கொடி

அதோட, “கோடி கோடியா… ஹிஹி… தொண்டருங்க வச்சிருக்கிற தினகரன், இன்னொரு கட்சிக்கொடியில இருக்கிற அதே டைப் ஜெ,. உருவத்தை தவிர்த்திருக்கலாமே”னு சொல்றாங்க.

ஏதோ.. தினகரன் கவனத்துக்கு போகட்டுமேன்னு நானும் இந்த மேட்டரை சொல்லிட்டேன்.

 

More articles

1 COMMENT

Latest article