சென்னை,

திமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து டிடிவி தினகரன், தனியாக கட்சி நிர்வாகிகளின் பட்டிலை அறிவித்தார்.

இதையடுத்து இரண்டாக உடைந்துள்ள அதிமுக அம்மா அணியில் மோதல் முற்றி வருகிறது.

டிடிவியால் அறிவிக்கப்பட்ட  பலர் தங்களை கலந்தாலோசிக்காமல் தினகரன் பதவி அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவி தேவையில்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் டிடிவியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பினரும் மாறிமாறி ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போதைய அமைச்சர்களுக்குள்ளும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தினகரன் ஆதரவு முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் டிடிவியை ஆதரித்து பேசி வருகிறார்.

எடப்பாடியிடம் அமைச்சர் பதவி கேட்டும் கிடைக்காத விரக்தியில் சட்டசபை அவை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தோப்பு, தற்போது அமைச்சர்களுக்கு எதிராக பகிரங்கமாக களமிறங்கி உள்ளார்.

டிடிவி தினகரன் அறிவித்த பதவிகள் செல்லாது என்றால் சசிகலா அறிவித்த செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் பதவிகளும் செல்லாது தானே என கேள்விக்கணைகளை வீசியுள்ளார்.

டிடிவி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக கட்சி நடைமுறையை மீறி டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஏற்க முடியாது என கூறினார்.

அதேபோன்ற அமைச்சர் ஜெயக்குமாரும், அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான பிரச்சினை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியாக இருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சரும், தினகரனால் கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவருமான பி. பழனியப்பன் கூறும்போது, கட்சியை வலுப்படுத்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாகப் பாடுபடுவேன் என்றும்,

முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான செந்தில்பாலாஜி, சசிகலாவின் ஒப்புதலுடன்தான் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதிரடியாக கூறி வந்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், டிடிவி தினகரன் அறிவித்த பதவிகள் செல்லாது என்றால் சசிகலா அறிவித்த செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் பதவிகளும் செல்லாது தானே என கேள்விக்கணைகளை வீசியுள்ளார்.

இதன் காரணமாக தமிழக அரசில் தற்போதைய அமைச்சர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் சூடுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.