நாளை முரசொலி பவள விழா: ரஜினி கமல் கலந்துகொள்வார்களா?

சென்னை:

முரசொலி நாளிதழின் பவள விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர்கள் கமல், ரஜினி கலந்துகொள்வார்களா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதை விழாவாக கொண்டாட திமுக தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில், அதிமுகவை தவிர்த்து, அனைத்து கட்சிகளுக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல  நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு நடிகர்கள், திரையிலகினர்களுக்கும்  திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முரசொலியின் பவள விழாவில், நடிகர் கமலஹபாசன், ரஜினிகாந்த் பங்கேற்க அழைப்பு திமுக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதும், இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
English Summary
dmk newspaper Murasoli Coral festival function tomorrow, Rajini - Kamal will participation?