ஜிஎஸ்டி : ரூ 20 அதிகம் வாங்கிய டி டி ஈ வைரலாகும் வீடியோ

கமதாபாத்

ஜிஎஸ்டி காரணமாக குஜராத் குவீன் ரெயிலில் ரூ 20 அதிகம் வசூலித்த டி டி ஈ பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு வாங்கப்படும் ரெயில் டிக்கட்டுகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என அரசு தெளிவாக அனைத்து மீடியாக்களிலும் அறிவித்து உள்ளது.   ஆனால் குஜராத் க்வீன் ரெயில் வந்த பயணச்சீட்டு பரிசோதகர் ஜிஎஸ்டி காரணமாக விலை உயர்ந்து விட்டதாகக்கூறி அனைத்து பயணிகளிடமும் ரூ 20 அதிகம் வசூலிக்க ஆரம்பித்தார்.

இதற்கு பெரும்பாலான பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அரசின் ஆணையின் காரணமாக தான் அதிகம் வசூலிப்பதாக அந்த பரிசோதகர் கூறினார்.  அந்த உத்தரவை காட்டுமாறு கேட்ட பயணிகளிடம் மறுத்து விட்டார்.  செய்தித்தாளைக் காட்டி அதிகம் வசூலிக்கக் கூடாது என்பதையும் ஏற்க மறுத்தார்.

இந்த காட்சி வீடியோ பதிவாகி வைரலாக பரவியது.   இதுவரை அந்த பரிசோதகர் மீது ரெயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


English Summary
TTE collected Rs 20 extra per ticket because of GST in gujarat queen express