திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 முதல் 22 வரை ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் என்ற tirupatibalaji.ap.gov.in இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசர பல ஆயிரம் பேரும் வரும் நிலையில், பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில், முன்கூட்டியே தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுபோல டிசம்பர் மாதத்தில் திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் அறைக்கான முன்பதிவும் தொடங்கி உள்ள என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவுகளை https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.