டெல்லி

சோனியா மற்றும் ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு படம் உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது.

நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று (மே 25) 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

நேற்றைய 6 ஆம் கட்ட தேர்தலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் தங்கள் மை வைத்த விரல்களைக் காட்டும் விதமாக செல்ஃபி எடுத்து அதனை ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பதிவினை பகிர்ந்த பயனர்கள் சிலர், ராகுல் காந்தி – சோனியா காந்திக்கு பின்னால் இயேசு கிறிஸ்துவை சித்தரிக்கும் படம் இருப்பதாக பகிர்ந்தனர்

ஒரு செய்தி நிறுவனம் இவ்வாறு வைரலான படத்தை உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, ​​அவர்களுக்குப் பின்னால் உள்ள சுவரொட்டியில் மூன்று தனித்துவமான சிவப்பு புள்ளிகள் கண்டறியப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் படங்களில் இத்தகைய விவரம் அரிதானது. இந்த படம் ஒரு இணையதளத்தில். நிக்கோலஸ் ரோரிச்சின் கலைப்படைப்பான “மடோனா ஓரிஃப்ளம்மா, 1932” என அந்த படம் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

நிக்கோலஸ் ரோரிச்சை ஒரு பன்முக தன்மை (ஓவியர், எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தியோசோபிஸ்ட் மற்றும் பொது நபர்) கொண்ட புகழ் பெற்ற ரஷ்ய நபர் என விவரித்துள்ளது. இவர் ரஷ்யாவில் தத்துவஞானி, அறிவாளி மற்றும் ஆன்மீக செல்வாக்கு கொண்டவர் என்பதால் ராகுல் மற்றும் சோனியா காந்தியின் செல்ஃபிக்குப் பின்னால் இருக்கும் படம் இயேசு கிறிஸ்துவை குறிக்கவில்லை எனவும், மாறாக அது ஒரு கலைப்படைப்பு எனத் தெரியவந்துள்ளது.