‘விசா’ ரத்து குறித்த டிரம்ப்பின் அறிவிப்புக்கு, டுவிட்டர் அதிருப்தி!

Must read

வாஷிங்டன்,

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கை கள் எடுத்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையா உத்தரவில் கையெழுத்திட்டு வருகிறார். இதன் காரணமாக நாளை என்ன அறிவிப்பு வருமோ என அமெரிக்கர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளே அமெரிக்காவை கவனித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம், மற்ற நாடுகளில் இருந்து  அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை  பிறப்பித்தார். இது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர், ‘பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களால் கட்ட மைக்கப்பட்டதுதான் ட்விட்டர். இதனால் அவர்களுடன் எப்போதும் துணை நிற்போம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்,  மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் டிரம்பின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article