அழகு தேவதை டயானாவுக்கு கென்சிங்டன் அரண்மனையில் சிலை!

Must read

ழகு தேவதை டயானாவுக்கு சிலை வைக்க அவரது மகன்களான இளவரசர்கள் முடிவு செய்துள்ளனர்.

டயானாவின்  இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர்கள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆவர்.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமணம் முடிந்தது முதல்,  பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு என செய்திகள் உலாவிய நேரத்தில், தனது ஆண் நண்பருடன் காரில் சென்றபோது,  சாலை விபத்து காரணமாக மரண மடைந்தார்.

டயானா  இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது சிலையை அவரது மகன்களான  இளவரசர் வில்லியமும்,  ஹாரியும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மறைந்த தனது தாயான  “இளவரசி டயானாவின் தாக்கத்தை அங்கீகரிக்க சரியான நேரமிது” என்று இந்த இரு இளவரசர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இளவரசி டயானாவின் முன்னாள் இல்லமான கென்சிங்டன் அரண்மனையின் பொது வளாகத்தில் அவருடைய சிலை நிறுவப்படவுள்ளது.

“எங்களுடைய அம்மா பலரின் வாழ்க்கையை தொட்டுள்ளார். நிறுவப்படும் அவருடைய சிலை கென்சிங்டன் மாளிகையை பார்வையிடுவோர் அனைவரும் அவருடைய வாழ்க்கையையும், அவர் நமக்கு விட்டு சென்ற அனைத்தையும் நினைவுகூறச் செய்யும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இளவரசி டயானாவை நினைவுகூர்வதற்கு பேரன்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக எலிசபெத் அரசி தெரிவித்திருக்கிறார்.

டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற அழகு தேவதை டயானா.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மற்றவர்கள் மீது கருணை, அன்பு செலுத்துங்கள். ஒரு நாள் உங்களுக்கும் அதேபோல அன்பும், கருணையும் தேடி வரும் என்று அடிக்கடி சொல்லுவார் டயானா.

இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.  சரித்திரம் படைத்த வரலாறு அவருடையது.

இளவரசி டயானாவுக்கு அமைக்கப்படும் இந்த சிலை, அவருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றJ, லண்டனில் அமையும் நான்காவது நினைவு சின்னமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article