சென்னை,

திமுக இரு அணிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தம்பித்துரையின் பேச்சு ஓபிஎஸ் அணியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக எடப்பாடி தலைமையில் மூத்த அமைச்சர்கள் கலந்துபேசி, தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கி வைப்பது என்று முடிவு எடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அதன் காரணமாக தினகரனும், கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். ஆனால்,பதவியை விடமாட்டேன் என்றும், அது சசிகலா கொடுத்தது. அவர் சொன்னால் மட்டுமே துணைப்பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.

ஜெயக்குமாரின் அறிவிப்பை தொடர்ந்து ஓபிஎஸ், இது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தற்போது வேறுமாதிரியாக பேசி உள்ளார்.

ஓ.பி.எஸ். நிர்பந்தம் காரணமாக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை என்றும், கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுத்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தோம் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டிரம்பின் வெற்றிக்கே நான் தான் காரணம் என்று கூட ஓ.பி.எஸ். கூறுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த நக்கல் பேச்சு ஓபிஎஸ் அணியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் அதிமுக எம்.பி. தம்பித்துரையும், எடப்பாடிதான் முதல்வர், அதில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக இரு அணிகள் இணைவது கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.