சென்னை:

மெட்ரோ ரயில் சுரங்க பணி காரணமாக சென்னையில் பல இடங்களில் திடீர் பள்ளங்களும், பல இடங்களில் சிமெண்ட் கலவைகளும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில்,  சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மீண்டும் சிமென்ட் கலவை வெளியேறி யதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  அதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள்  வாக்குவாதம் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிழக்கு முத்தையா தெரு பகுதியில் பூமிக்கு அடியில் நடைபெறும் மெட்ரோ ரயில் சுரங்கப்பனியின் காரணமாக பூமிக்கு அடிப்பகுதியிலிருந்து கெமிக்கல் கலவை பீய்ச்சியடித்து வெளியேறியது.

தற்போது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியால் முகமது யூசுப் என்பவரது வீட்டில் தரையில் இருந்து சிமென்ட் கலவை வெளியேறியது.

இதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு வெளியேறினர். அக்கம்பக்கத்தினரும் பீதி அடைந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இந்த கலவை தெரு முழுவதும் பரவி குளம்போல் தேங்கியுள்ளது.  இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இதுபோல கலவை வெளியாவிது இந்த பகுதியில் இது இரண்டாவது முறை.

தற்போது சரி செய்யும் பணியில் மெட்ரோ ரெயில் நிர்வாகம்  ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே  சென்னையில்  மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் காரணமாக   பாண்டி பஜார், ராஜீவ் காந்தி மருத்துவமனை பகுதி,  அண்ணா சாலையில் சர்ச் பார்க் கான்வென்ட், ஸ்டான்லி மருத்துவமனை அருகே பள்ளம் போன்ற திகில் சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதும.