வாஷிங்டன்

மெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தேர்தல் மோசடி வழக்கில் கைதாகி 22 நிமிடங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த   2017 ஆன் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (வயது 77) வெற்றி பெற்றார்.  கடந்த 2021-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை மறைக்க ஆபாச டிகைக்கு பணம் கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜார்ஜியா மாகாண தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவினார். அதனை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றனர். எனவே டிரம்ப் உள்பட 19 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் முடிவு செய்து குற்றப்பத்திரிகையில் உள்ள அனைவருக்கும் கைது வாரண்டு பிறப்பித்தது.  கடந்த 25-ந்தேதிக்குள்  தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று  ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா சிறைக்கு டிரம்ப் தாமாக முன்வந்து சரணடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவர் சிறையில் ஆஜரானதும் அவரது அங்க அடையாளங்கள் குறிக்கப்பட்டு கைதி எண்ணும் வழங்கப்பட்டது. பிறகு ரூ.1 கோடியே 65 லட்சம் பிணைத்தொகையாக வழங்கப்பட்டதால் டிரம்ப் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். டிரம்ப் சுமார் 22 நிமிடங்கள் சிறையில் இருந்தார்.

சிறையில் இருந்து வெளியேறிய டிரம்ப் நியூ ஜெர்சி மாகாணத்துக்குத் தனி விமானத்தில் புறப்பட்டார். டிரம்ப் இது குறித்து நிருபர்களிடம்,`தாம் கைதான இந்த நாள் அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாள்’ எனத் தெரிவித்தார்.