அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு அதிகரிக்கும் ஆதரவு: கருத்துக் கணிப்புகளில் தகவல்

Must read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிடனுக்கு பெரும்பான்மையான இந்திய, அமெரிக்கர்கள் அதிகம் பேர் ஆதரவளிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன்படி இம்முறை நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. பல நாடுகளை போன்று அமெரிக்க அரசியல் அமைப்பிலும் 2 கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஒன்று,அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. இந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தான். இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஜோ பிடன். இவருக்கு ஆதரவான அலை இப்போது வீசுவதாக கருத்துக் கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

ஏஏபிஐ (AAPI) நடத்திய ஆய்வில், தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான பிடனுக்கு பெரும்பான்மையான இந்திய-அமெரிக்கர்கள்  ஆதரவளிப்பதாக தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 66 சதவீத இந்திய-அமெரிக்கர்கள் தற்போது பிடனுக்கு ஆதரவாகவும், 28 சதவீதம் பேர் டிரம்பிற்கு ஆதரவாகவும், ஆறு சதவீதம் பேர் தீர்மானிக்கப் படாதவர்களாகவும் உள்ளனர்.

77 சதவீதம் பேர் முன்னாள் அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், 16 சதவீதம் பேர் டிரம்பிற்கும் வாக்களித்தனர். 2012ம் ஆண்டில், இந்திய-அமெரிக்கர்கள் 84 சதவீதம் பேர் பராக் ஒபாமாவுக்கு வாக்களித்தனர்.

ஜனநாயகக் கட்சியினர் இந்திய-அமெரிக்கர்களை உள்ளடக்கிய வெவ்வேறு குழுக்களுக்கு போதுமான அணுகுமுறையை நடத்த வேண்டும் என்று இந்திய-அமெரிக்க காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

பென்சில்வேனியா, மிச்சிகன், புளோரிடா மற்றும் வட கரோலினா போன்ற முக்கிய  மாகாணங்களில் இந்திய-அமெரிக்கர்கள் நிறைய  பேர் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 2016ல் கிளின்டனுடன் ஒப்பிடும்போது பிடனுக்கான ஆதரவு குறைந்துவிட்டாலும், குடியரசுக் கட்சிக்கான ஆதரவு இந்த 4 ஆண்டுகளில் 19 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைந்துள்ளது.

More articles

Latest article