டிஎன்பிஎல்-2019: 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்!

Must read

சென்னை:

நேற்று இரவு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் டைட்டிலை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடைபெற்ற டிஎன்பிஎல் 3 ஆண்டுகளில் 2முறை டைட்டிலை கைப்பற்றி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. நேற்றைய  இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

நேற்றைய இறுதி ஆட்டத்தின்போது ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் களாக  கோபிநாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் களம் இறங்கினர். ஆனால், அவர்கள் சோபிக்க முடியாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.  முதல் ஓவரிலேயே  ஜே.கவுசிக் வீசிய ஷாட்பிட்ச் பந்தை கோபிநாத்தூக்கியடித்து கேட்ச்  கொடுத்து, ரன் ஏதும் எடுக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.

நேற்று சேப்பாக்கம் ஆடுகளும் பவுலர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், பவுலர்களின் ஆதிக்கம் தொடர்ந்து. தொடர்ந்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பவுலர்களின் பந்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்,  கங்கா ஸ்ரீதர் ராஜூ (4 ரன்), அடுத்து வந்த நட்சத்திர வீரர் விஜய் சங்கர் (1 ரன்) ஆகியோர் வெளியேறி அதிர்ச்சியை எற்படுத்தினர். இதன் காரணமாக சேப்பாக்  கில்லீஸ் தடுமாறியது. பின்னர் இறங்கிய  கேப்டன் கவுசிக் காந்தி தாக்குப்பிடித்து ஆடினார். அவர்  22 ரன்னிலும் (24 பந்து), விக்கெட் கீப்பர் சுஷில் 21 ரன்னிலும் வெளியேறினர். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களுடன் (11 ஓவர்) பரிதவித்தது. அடுத்ததாக வந்த சசிதேவ் (44) மற்றும் முருகன் அஸ்வின் (28) இருவரும் சற்று நிலைத்து ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  திண்டுக்கல் அணி சார்பில் கவுசிக் மற்றும் மோகன் அபினவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக  ஹரி நிசாந்த், ஜெகதீசன் களமிறங்கி அவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி, அடுத்த வந்த  சதுர்வேத் ரன் ஏதும் எடுக்காமலும் 4ரன்களுக்கு 3 விக்கெட்டு களை இழந்து வெளியேறியது திண்டுக்கல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து களமிறங்கிய சுமந்த், மோகன் அபினவ் ஜோடி சற்று தாக்குப்பிடித்து ஆடியது. சுமர்ந்த 46 ரன்னிலும், மோகன் அபினவ் 21 ரன்னுக்கும் ஆவுட்டாகி களத்தை விட்டு வெளியேறினர்.  அடுத்து வந்த விவேக் 23 ரன்களுக்கும், முகமது 15 ரன்களில் ஆட்டமிழக்க திண்டுக்கல் அணி மீண்டும் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது

சேப்பாக் அணியில் பெரியசாமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு, அணியின்  வெற்றியை உறுதி செய்தார்.

2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சேப்பாக் அணி. தற்போது இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.  ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சிறப்பாக பந்து வீச்சில் செயல்பட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டார்.

 

More articles

Latest article