சென்னை :

டப்பு  டிஎன்பிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி  சாதனை படைத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களை உற்றுநோக்க வைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் பவுலர்  பெரியசாமி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடப்பு 2019 டிஎன்பிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  அணி.  அணியின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் பவுலர் பெரியசாமி. இவர் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் காரணமாகவே, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி வாகையை சூடியுள்ளது.

சேப்பாக் அணியின் சூப்பர் பவுலர் பெரியசாமியின் யார்க்கர் பந்துக்கு எதிரணியின்  விக்கெட்டுகள்  மளமளவென சரிந்தது சாதனையாக போற்றப்படுகிறது. எளிமையான குடும்ப சூழ்நிலையில் இருந்து, தனது திறமையின் மூலம் டிஎன்பிஎல் அணியில் இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த  பெரியசாமியின் பந்து வீச்சு இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே… வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் அணியின் வெற்றிக்கு உதவிய அவரது பந்து வீச்சு அசாதரணமாக இருந்தது. சுமார் 5அடி உயரமுள்ள பெரியசாமி சுமார் 4 அடி உயரத்துக்கு துள்ளிக்குதித்து வீசும் யார்க்கர் பந்து, சுமார் 135 கி.மீட்டர் வேகத்தில் சென்று விக்கெட்டுகளை வீழ்த்திச் சென்றது.

தனது முதல் சீசனிலேயே  நம்பமுடியாத அளவுக்கான அபரமான திறமையை வெளிப்படுத்தி உள்ள  பெரியசாமி இந்த முதல் சீசனிலேயே 10.47 மணி நேரத்தில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரது எக்கானமி ரன் ரேட்  6.47 ஆகவும், அவரது  ஸ்ட்ரைக் ரன் ரேட்: 9.7 சதவிகிதமாகவும்  என உள்ளது.

பெரியசாமியின் பவுலிங் திறமை சமூக வலைதளங்களில் போற்றப்பட்டு வரும் நிலையில், அவரை  கவனிக்கப்பட வேண்டிய நபர் என்பது இந்திய கிரிக்கெட் வாரியமும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இவரைப் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் மட்டுமின்றி கட்டாயமும் ஆகும். திறமை வாய்ந்த தமிழக பவுலரை பிசிசிஐ இந்திய அணி சேர்த்துக்கொள்ளும் என்று நம்புவோம்…

பெரியசாமி நேற்று இறுதி ஆட்டத்தின்போது, திண்டுக்கல் டிராகன் அணிக்கு எதிராக பெரியசாமி,  பந்துகளை வீசி, முதலில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், கடைசி ஓவரையும் அவரே வீசினார்.

கடைசி ஓவரில் திண்டுக்கல் அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழலில்,  பெரியசாமி அதிரடியாக யார்க்கர் பந்துக்களை தெறிக்க விட்டு, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை அள்ளி வெற்றிக்கோப்பையை உறுதிசெய்தார்.

இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சேப்பாக் அணி. தற்போது இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

கடைசி ஆட்டத்தில் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெரியசாமி ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும்  தேர்வு செய்யப்பட்டார்.