சென்னை: 
ண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா,  நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டுத் தான் சென்றேன். தேர்தலிலிருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்குத் தெரியும். அதிமுகவைக் காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். என்னால் அதிமுகவுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நமக்குத்தேவை ஒற்றுமைதான்; நீரடித்து நீர் விலகாது.  மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பிலிருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் என்றார்.