ஆப்கானிஸ்தான் : பாகிஸ்தானில் இருந்து வந்த வெடிகுண்டு டிரக்குகள் பிடிபட்டன

Must read

ங்கர்கர், ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் எடுத்து வந்த டிரக்குகள் ஆப்கானிஸ்தானில் பிடிபட்டுள்ளன.

பல உலக நாடுகள் சமீபகாலமாக பாகிஸ்தான் நாட்டை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி என வர்ணித்து வருகிறது.    அதை நிரூபிப்பது போல் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிர வாத அமைப்பான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

ஈரான் நாட்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பின்னணியில் உள்ளதாக அந்த நாடு குற்றம் சாட்டி உள்ளது.   இந்த இரு தாக்குதல்களுக்காக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல உலக நாடுகள் ஈரானையும் இந்தியாவை வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சிமிண்ட் டிரக்குகள் சென்றுள்ளன.   அதை ஆப்கானிஸ்தான் நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினர் சோதனை இட்டுள்ளனர்.   அந்த டிரக்குகளில் சிமிண்ட் பைகளில் ஏராளமான வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த சோதனையில் சுமார் 10000 கிலோ எடை உள்ள வெடி குண்டுகள் பிடிபட்டுள்ளன.   அது மட்டுமின்றி ஏராளமான நவீன போர்க்கருவிகளும் கிடைத்துள்ளன.   இதை ஒட்டி 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

More articles

Latest article