ஸ்ரீநகர்

புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதில் அகமது தார் ஆறு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

புல்வாமா மாவட்டம் குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவன் அதில் அகமது தார்.  இவனுக்கு தற்போது 20 வயதாகிறது.    கடந்த 2016 ஆம் வருடத்தில் இருந்து இவன் தீவிரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பாவுக்கு பல பணிகள் புரிந்துள்ளான்.   காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக உள்ள பல லஷ்கர் ஈ தொய்பா குழுவை சேர்ந்தவர்களுக்கு இவன் உதவியாளனாக இருந்துள்ளான்.

இவன் மட்டுமின்றி இவனுடைய நெருங்கிய சொந்தங்களுக்கும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக குந்திபாக் மக்கள் தெரிவிக்கின்றனர்.   இவனுடைய ஒன்று விட்ட சகோதரன் மன்சூர் தார் பயங்கர வாதிகளான அபு காசிம் மற்றும் அபு துஜானா ஆகியோர் சர்வதேச எல்லையில் தப்பிச் செல்ல உதவி புரிந்துள்ளான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நேவா தெற்கு பகுதியில் மன்சூர் தார் மற்றும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.  அதன் பிறகு அதில் மற்றும் அவன் நண்பர்கள் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தில் சேர்ந்து நேரடியாக பணி புரிய தொடங்கினார்கள்.    அதன் பிறகு கடந்த 2 வருடங்களில் அதில் 6 முறை கைது செய்யப்பட்டுள்ளான்.

ஒவ்வொரு முறையும் விசாரணையில் அவனுக்கு எதிரான சாட்சியம் கிடைக்காததால் அதில் குற்றப்பத்திரிகை பதியாமலே விடுவிக்கப்பட்டுள்ளான்.    இதற்கிடையே ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தினரிடம் இவன் பயிற்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாதம் 9 ஆம் தேதி அன்று தூக்கிடப்பட்ட அஃப்சல் குருவின் நினைவாக ஜெய்ஷ் ஈ முகமது இதே ஜம்மு-ஸ்ரீநகர் பாதையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது.   அந்த தாக்குதலை நடத்த இருந்த ஷபிர் குறித்த விவரங்கள் அரசுக்கு தெரிய வந்துள்ளது.   ஷபீர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளான்.

ஷபிர் கொல்லப்பட்டாலும் இந்த தாக்குதல் திட்டம் மரணமடையவில்லை.   ஷபிருக்கு பதில் அந்த வேலைக்கு அதில் அகமது நியமிக்கப்பட்டுள்ளான்.    வெடிகுண்டுகள் நிறைந்த ஸ்கார்ப்பியோ காரை ஓட்டி வந்து அவன் விபத்தை ஏற்படுத்தி உள்ளான்.   ஷபிர் இறந்துவிட்டதால் தாக்குதல் நடக்காது என நினைத்த ராணுவத்தினர் ஏமாந்து போயினர்.

 

நன்றி : மும்பை மிர்ரர்