மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் 2013-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் த்ரிஷ்யம்.

இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக தெலுங்கில் வெங்கடேஷ், இந்தியில் அஜய் தேவ்கன், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் மலையாளத் திரைப்படமாக த்ரிஷ்யம் இப்போது உருவாகியுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/p/CT4qD6yIk2H/