தென்னிந்தியத் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் பணிபுரிந்த ரம்யா கிருஷ்ணன், ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து முத்திரை பதித்தார்.

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சக நடிகைகள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் பார்ட்டியில் த்ரிஷா, குஷ்பு, ராதிகா சரத்குமார், மது, லிஸ்ஸி, அனு பார்த்தசாரதி, உமா ரியாஸ் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.