திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியும் பிரபல நடிகையுமானவர் நஸ்ரத் ஜஹான்.

2019-ஆம் ஆண்டு நிகில் ஜெயின் என்கிற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்துகொண்ட நஸ்ரத் கடந்த வருடம் அவரை பிரிந்தார்.

இவர்களது திருமணத்தை இந்தியாவில் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை என்றும் அதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்மையில் நஸ்ரத் ஜஹான் கூறியிருந்தார்.

கடந்த மாதம் நஸ்ரத் கஜானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழில், தன்னுடைய ஆண் குழந்தையின் பெயர் இஷான் என்றும் குழந்தையின் தந்தையின் பெயருக்கான இடத்தில் பிரபல நடிகரும், நஸ்ரத் ஜஹானின் ஆண் நண்பருமான யாஷ் தாஸ்குப்தாவின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.