டில்லி:

க்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவுக்கு, பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சியான  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான ஆட்சி ஏற்கனவே முத்தாக் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி, அது மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால், காலாவதியானது. தற்போது மீண்டும் மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  கூட்டணிக்கட்சி யான  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முத்தலாக் மசோதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று ராஜீவ் ரஞ்சன் எம்.பி. தெரிவித்துள்ளார். முத்தலாக் மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிக்காது என தெரிவித்துள்ளார்.