வில்வாத்ரிநாதர் திருக்கோயில் அனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, ஶ்ரீபரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது. அவர் தன் கோடாளியை கடலில் பாய்ச்சி, அதிலிருந்து நிலத்தை இப்பூமியுடன் இணைத்தார் என்பது புராணம். மேற்கு தொடர்ச்சி மலை கேரளத்தில் கிழக்கு எல்லையாக இருக்கிறது.
கேரளத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது, சென்று பார்த்தால் பிரமிப்பூட்டும் வண்ணம் இருக்கும், கண்டால் தான் அதன் அழகை ரசிக்க முடியும்.
திருச்சூர் மாவட்டத்தில் தாலப்பில்லி தாலுகாவில் இருக்கிறது திருவிவாமலா என்னும் மலைத்தொடர். அருகில் பாரதபுழா என்று அழைக்கப்படும் நீலா நதி ஓடுகிறது.
இம்மலையின் கீழ் பொன்னாலான வில்வ மரம் இருப்பதால் இம்மலையிற்கு திருவில்வாமலா என்று பெயர் வந்தது. ஶ்ரீசிவனுக்கு பூஜை செய்ய மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ பத்ரம் மிகவும் விசேடமாகக் கருதப்படுகிறது என்பதை நினைவு கூறுவோம்.
கேரளத்தில் மூன்று ஶ்ரீஇராம க்ஷேத்திரங்கள் மிகவும் பழமையானதும் பிரபலமானதும் ஆகும். அவை திருவில்வாமலா, திருப்பரையார் மற்றும் திருவன்காட் என்பனவாகும். இம்மூன்று ஶ்ரீஇராம க்ஷேத்திரத்தில் வில்வாமலாயில் உள்ள ஶ்ரீஇராமர் மட்டுமே சுயம்பு.
இறைவனின் பெயரில் க்ஷேத்திரங்கள் அழைக்கப்படுவது வழக்கம் ஆனால் இங்குள்ள ஶ்ரீஇராமரோ “வில்வாத்ரிநாதர்” என்று இந்த க்ஷேத்திரத்தின் பெயரிலேயே விசேடமாக அழைக்கப்படுகிறார்.
ஶ்ரீலக்ஷ்மண ஸ்வாமிக்குத் தனிச் சன்னிதி உள்ளது இந்த க்ஷேத்திரத்தின் மற்றொரு விசேடமாகும்.
திருக்கோயில் இருப்பிடம் :
“வில்வாத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வாமலா, திருச்சூர்”