வங்கக் கடலில் நிலநடுக்கம்….. சென்னையில் நில அதிர்வால் மக்கள் பீதி

சென்னை:

சென்னை அருகே வங்கக் கடலில் இன்று அதிகாலை  காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில் சில பகுதிகளில் உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உருவானதாக கூறப்படுகிறது. இதை மெரிக்க புவியியல் மையம்  உறுதி செய்துள்ளது.

இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. இதனால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதுபோல் மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கும் இதுபோல் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் தாக்கர் சென்னை உள்பட பல இடங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: earthquake hits the Bay of Bengal, Tremors felt in Chennai, சென்னை மக்கள் பீதி, சென்னையில் நில அதிர்வால் மக்கள் பீதி, சென்னையில் நிலநடுக்கம், நில அதிர்வு, வங்கக் கடலில் நிலநடுக்கம்
-=-