ஓடும் ரெயிலில் வாலிபரைக் கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி

Must read

த்தங்கரை

ரெயிலில் இருந்து வாலிபரை திருநங்கைகள் தள்ளிக் கொன்ற சம்பவத்தில் இடம்பெற்ற திருநங்கை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த சத்யநாராயணா, தனது நண்பர்களான வீரபாபு, பாப்பண்ணதுரா, சாமிதுரா, ஆகியோருடன் திருப்பூர் செல்ல பொக்காரோ விரைவு ரெயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.     ஓடும் ரெயிலில் பெட்டியின் படியில் அமர்ந்திருந்த சத்யநாராயணா மற்றும் வீர பாபுவிடம் சில திருநங்கைகள் பிச்சை கேட்டுள்ளனர்.   தரமறுத்த சத்ய நாராயணாவை ஒரு திருநங்கை அடித்து கீழே தள்ளி உள்ளார்.   கீழே விழுந்த சத்ய நாராயணா அங்கேயே மரணம் அடைந்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற வீரபாபுவும் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.    இதைப் பார்த்த மற்றப் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.    உடனே திருநங்கைகள் இறங்கி ஓடி விட்டனர்.    இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஓடிய திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

இந்த செய்தி பரவவே,  சத்யநாராயணாவை அடித்து கீழே தள்ளிய திருநங்கை ஸ்வேதா பயத்தில் ஆழ்ந்துள்ளார்.    அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.   ஆனால் உடன் இருந்த திருநங்கைகள் ஸ்வேதாவை காப்பாற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அங்கு ஸ்வேதாவுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.

More articles

Latest article