டெல்லி: பயணிகள் ஏறும் இடத்தை மாற்றும் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருவர் ரயில் நிலையத்தில் டிக்கெட்ட எடுத் திருந்தாலும், அவர்கள் ரயில் ஏறும் ரயில் நிலையத்தை ஆன்லைன் மூலம் மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இணையதளம் வாயிலாக விரைவு ரயிலுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள்,  தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பவர்கள், தான் ரயிலில் ஏறுவதற்கு 48மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாக ரயில் நிலையத்துக்கு நேரில் வந்து எழுதிக் கொடுத்துத்தான் புறப்படும் ரயில் நிலையத்தை மாற்ற முடியும் என்ற சிரமம் இருந்தது.

தற்போது அது எளிதாக்கப்பட்டுள்ளது. தற்போது, இதில் ரயில் நிலையங்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுக்களுக்கும் மாற்றும் வசதி  விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அதில், டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணைக் கொடுத்து, அதில் வரும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றும் வாய்ப்பு வரும்.  இந்த வசதி  ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு வரை  www.irctc.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கே மெயின் மெனுவுக்குக் கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக்  செய்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும், கவுண்டர் டிக்கெட் போர்டிங் பாயிண்ட் சேஞ் என்ற மெனுவை கிளிச் செய்யவும்  மாற்றலாம். மஇதனால், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டுவிட்டால்,  அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.